“சோதனைக்கெல்லாம் அச்சப்படும் இயக்கம் திமுக அல்ல , அமலாக்கத்துறை சோதனையால் பாஜக மேலும் பலவீனம்தான் அடையும்” அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார் .
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .
சென்னை உள்பட அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 5 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வரும் நிலையில் அமைச்சர் பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கௌதம் சிகாமணி இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .
செம்மண் குவாரி தொடர்பாக,கடந்த 2012ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அமலாக்கத்துறை தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது :
“சோதனைக்கெல்லாம் அச்சப்படும் இயக்கம் திமுக அல்ல , அமலாக்கத்துறை சோதனையால் பாஜக மேலும் பலவீனம்தான் அடையும்” அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் .
அமலாக்கத்துறை மூலம் மிரட்டி அடிமைப்படுத்தலாம் என மத்திய பாஜக அரசு நினைக்கிறது. மத்திய அமைச்சர்கள் மீதும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன; என்றாவது அவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
தமிழ் மண்ணில் பாஜக நிச்சயம் தோல்வியடையும் என்றும் அமலாக்கத்துறை சோதனையால் மக்களிடையே திமுகவுக்கு செல்வாக்கு அதிகமாகும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.