தலைவரின் அன்பு மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால்சலாம் படத்தின் ட்ரைலர் (Lal Salaam Trailer) இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் இளம் கதயநாயகர்கள் பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் இருப்பவர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் .
இவர்களின் கூட்டணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அன்புமகளான ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமே ‘லால் சலாம்’.
கிரிக்கெட்டை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார் .
இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைவரின் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் இப்படம் பிப் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரென் ஜெயண்ட் நிறுவனம் தட்டி தூக்கி உள்ளதகவும் படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் மூலம் அறிவித்தது .
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் படு பிரம்மாண்டமாக நடந்தது.
இதையடுத்து இப்படம் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்களை அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் (Lal Salaam Trailer) குறித்த அட்டகாச அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன் படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கும்
‘லால் சலாம்’ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Also Read : https://itamiltv.com/52-new-projects-laid-foundation-stone-by-udayanidhi/
தனது அன்பு மகளான ஐஸ்வர்யாவின் நடிப்பில் முகம் காட்டியுள்ள ரஜிகாந்த் இந்த படத்திற்கு மிக பெரிய ப்ரோமோஷன் என்றாலும் எதிர்பார்த்தபடி இந்த படம் வெற்றி பெறுமா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடித்தாலும் அவருக்கு 50 கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.