மதுரை எய்ம்ஸில் கட்டுமானத்திற்கு முந்தைய பணிகளே (pre-construction) தற்போது நடந்து வருவதாகவும் ; தமிழ்நாடு அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததும் முக்கிய கட்டுமானப் பணிகள் தொடங்கும் என மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் தலைமையில் மதுரையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டது .
இதையடுத்து அந்த மருத்துவமனையை கட்ட எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததால் தென் மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும் என அப்பகுதிகளை சார்ந்த மக்களும் அரசியல் தலைவர்களும் கேள்வி மேல் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தனர் .
Also Read : உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மன்சூர் அலிகான் டிஸ்சார்ஜ்
இந்நிலையில் தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது .
மதுரை எய்ம்ஸில் கட்டுமானத்திற்கு முந்தைய பணிகளே (pre-construction) தற்போது நடந்து வருகின்றன; தமிழ்நாடு அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததும் முக்கிய கட்டுமானப் பணிகள் தொடங்கும்.
சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்னரே மதுரை எய்ம்ஸில் கட்டுமானப் பணிகள் நடப்பதாக செய்தி பரவிய நிலையில் எய்ம்ஸ் நிர்வாகம் தற்போது விளக்கம் கொடுத்துள்
மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 950 படுக்கைளுடன், (pre-construction) பத்து தளங்களுடன் கூடிய கட்டுமான பணிகள் விரைவில் நடைபெற உள்ளதாகவும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.