கன்னியாகுமரியில், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்குச் சென்ற மணப்பெண் ஒருவரை அவரது செல்லப் பிராணியானியான வளர்ப்பு நாய் அவரை போக விடாமல் அவருடன் பாசப் போராட்டம் (unconditional love) நடத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சித்திரை திரு மகாராஜபுரம் பகுதியில் சுயம்பு செல்வன் என்ற நபர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சுயம்பு செல்வனின் மகளுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது. டீ இதனையடுத்து சுகப்பிரியாவின் திருமணம் கடந்த இருதினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
மேலும், சுகப்பிரியா அவரது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், திருமணம் நடைபெற்று முடிந்த அன்று மணமகன் வீட்டிற்கு புறப்பட தயாரானார் சுகப்பிரியா.
இதைப் பார்த்த அவரது வளர்ப்பு நாய், மணப்பெண் சுகப்பிரியாவின் புடவையை பிடித்து கொண்டு அவரை போக விடாமல் தடுத்து பாச்சப் போராட்டம் நடத்தியது.
பின்னர், நீண்ட நேரம் பாசப் போராட்டதிற்கு (unconditional love) பிறகு தன் செல்ல நாயை சமாதானம் செய்து விட்டு, பிரிந்து செல்ல மனமில்லாமல் அங்கிருந்து கனத்த இதயத்துடன் சென்றார் மணப்பெண் சுகப்பிரியா.
இதனைக் கண்ட திருமணத்துக்கு வந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.