சீனாவில் காதலி பிரேக் அப் செய்ததால் 24 வயது இளைஞரின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ள சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் தனது காதலி BREAKUP செய்ததால் மலையேற தொடங்கிய 24 வயதான தைஷன் என்பவர், 5 மாத மலையேற்றத்திற்கு பிறகு முதுமையான தோற்றத்துடன் காணப்படுகிறார்.
Also Read : சென்னையில் பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்..!!
இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ள தைஷன் கூறியதாவது :
மலையேறுவது தனக்கு மன அமைதியை தருவதால் இப்படியே வாழ விரும்புவதாக தெரிவித்துள்ள தைஷன், தன் வயதை கூறும்போது யாரும் நம்பாமல், அடையாள அட்டையை பார்த்தே நம்புவதாக கூறியுள்ளார்.
என்னை பார்க்கும் அனைவரும் UNCLE என என்னை அழைக்கின்றனர் ஆரம்பத்தில் இது எனக்கு வருத்தத்தை கொடுத்தாலும் தற்போது அதனை ஏற்றுக்கொண்டு வாழ பழகிக்கொண்டதாக தைஷன் தெரிவித்துள்ளார்