சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பண்டிகைகள், கோவில் திருவிழாக்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதே போல் சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவு தினங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.
அதே போல் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு நாளைய தினம் செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 26ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஆகஸ்ட் 3ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது.