எதிர்வரும் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டில் (TTV Dinakaran) போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 19.04.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி வேட்பாளர்களாக கீழ்காண்பவர்கள் போட்டியிடுவார்கள்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் “தேனி” நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளார்
அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் P.செந்தில்நாதன் “திருச்சிராப்பள்ளி” நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளார் .
எதிர்வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் (TTV Dinakaran) பரப்புரைகளை ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.