தமிழகத்துள் பாஜகவை விட நாம் தமிழர் கட்சி கூடுதல் ஓட்டுகளை வாங்கி காட்டட்டும் என ( seeman vs annamalai ) அண்ணாமலை சவால் விட்டிருந்த நிலையில் தற்போது சீமான் சத்தமின்றி சாதித்து காட்டியுள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு என்னும் பணி வெற்றிகரமாக தொடக்கி நடைபெற்று வருகிறது.
சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் பாரத நாட்டில் அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. முதல் இடங்களுக்கு பிரதான கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியினர் அதிக தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது .
Also Read : கேப்டன் சமாதியில் தொடர் தியானத்தில் பிரேமலதா விஜயகாந்த்..!!
இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு ,நாகப்பட்டினம் ,திருச்சி, மற்றும் புதுச்சேரி ஆகிய 8 மக்களவைத் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
மக்களவை தேர்தலுக்கு முன் பாஜகவை விட நாம் தமிழர் கட்சி கூடுதல் ஓட்டுகளை வாங்கி காட்டட்டும் என்று தமிழக பாஜக தலைவரும் கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை சவால் விடுத்திருந்தார் .
இந்நிலையில் தற்போது 40 தொகுதிகளில் 8 இடங்களில் நாம் தமிழர் கட்சி முன்னிலை வகித்து வருவதால் ( seeman vs annamalai ) அண்ணாமலையின் சவாலை சீமான் சத்தமின்றி சாதித்து காட்டியுள்ளதாக நாதக தொண்டர்கள் கருத்து கூறி வருகின்றனர்.