மதுரையில் மேலும் 13 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு பாதிப்பு 100 ஐ தாண்டி உள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால் மழைக்கால நோய்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக சாதாரண சளி, காய்ச்சல்களுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல், டைப்பாய்டு போன்ற காய்ச்சல்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலும் அதிகமாக பரவி வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் மதுரையில் மேலும் 13 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 100 ஐ தாண்டி உள்ளது.
அதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200 ஐ தாண்டி உள்ளதாக கூறப்படும் 229 பேர் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் காய்ச்சல் அறிகுறியுடன் வரும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்து உரிய பரிசோதனை செய்து அதன்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் 500 க்கும் அதிகமான டெங்கு தடுப்பு பணியாளர்கள் கண்காணிப்பு பணிகளிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.