உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று (madurai meenatchi) கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
மதுரையில் ஒவ்வரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகளவில் மிக பிரபலமானது .
கோலாகலமாக நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி பக்க்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது .
இன்று தொடங்கி 12 நாட்கள் மீனாட்சி அம்மன் கோயிலின் நான்கு மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளும் வீதி உலா நிகழ்வு நடைபெறும்.
Also Read :https://itamiltv.com/when-stalin-became-chief-minister-tamil-nadu-got-seven-and-a-half-saturn-e-p-s/
இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா வரும் 23ம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பாரம்பரிய முறைப்படி ஆட்டு தோலால் செய்யப்பட்ட பைகளில் தண்ணீர் நிரப்பி அதனை கள்ளழகர் மீது பீச்சி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்வில் அதிக உயரழுத்த மோட்டார் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பீய்ச்சி அடித்து வந்த நிலையில் இனி மோட்டார் மூலம் தண்ணீர் பீச்சி அடிக்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது .
தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்சி (madurai meenatchi) அடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.