அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்பான ED அலுவலகத்தில் சோதனை செய்தபோது, பணி செய்ய விடாமல் தடுத்ததாக ED அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் மொத்தம் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த டிச.1ஆம் தேதி கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, அங்கித் திவாரியின் வீட்டிலும் அவர் பணிபுரிந்த இடத்திலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் மடிக்கணினி மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்பான ED அலுவலகத்தில் சோதனை செய்தபோது, பணி செய்ய விடாமல் தடுத்ததாக ED அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.