மகாத்மா காந்தியின் (mahatma gandhi) 76-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்த காந்தி, லண்டனில் கல்வி பயின்றார். இவர் தன் வாழ்நாளில் ஒடுக்குமுறை, தீண்டாமை, பெண் அடிமைத்தனத்தை வலுவாக எதிர்த்தார்.
தனது தனித்துவத்தால் மக்களை ஈர்த்த காந்தி, 1948-ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி டெல்லி பிர்லா மாளிகையில் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த தினத்தை, (ஜனவரி 30-ம் தேதி) இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாக தியாகிகள் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் ஜனவரி 30-ம் தேதி இன்று மகாத்தமா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அவரின் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி
இந்த வகையில் மகாத்மா காந்தியின் (mahatma gandhi) 76-வது நினைவு தினத்தை முன்னிட்டு ராஜ்காட்டில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடியை தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி..,
மகாத்மா காந்தியின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்ய எங்களை ஊக்குவிக்கின்றன என்றார்.
மற்றொரு பதிவில், பூஜ்ய பாபுவின் புண்ணிய திதியில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன், நமது தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்.
அவர்களின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்யவும், நமது தேசத்திற்கான அவர்களின் பார்வையை நிறைவேற்றவும் நம்மை ஊக்குவிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.
திமுக நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு
இந்நிலையில் மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினமான இன்று திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
அண்ணாமலை
காந்தியடிகளின் அவரது சுதந்திரப் போராட்டத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில்,
அகிம்சை எனும் போராட்ட தத்துவத்தை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று, உலகத் தலைவர்கள் பலருக்கு வழிகாட்டிய, மகாத்மா காந்தி அவர்கள் நினைவு தினமான இன்று, அவரது சுதந்திரப் போராட்டத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
இதையும் படிங்க : Headlines : இன்றைய தலைப்புச் செய்திகள்
சுதந்திர இந்தியாவுக்கான மகாத்மாவின் கனவுகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி, அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தி வருகிறது நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாரதம் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
https://x.com/airnewsalerts/status/1752208346919346258?s=20
மகாத்மா காந்தி நினைவுதினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார், மல்லிகார்ஜுன கார்கே, இணையமைச்சர் எல்.முருகன், ஜி.கே.மணி உள்ளிட்டோரும் புகழாரம் சூட்டினர்.