சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் சர்சை கருத்துக்களை பேசியதாக கூறி வழக்கில் சிக்கிய ஆன்மீகப் பேச்சாளர் மஹாவிஷ்ணு தன்னிடம் உதவி கேட்ட நபருக்கு செய்துள்ள தரமான சம்பவம் தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியதாகக் கூறி கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல ஆன்மீகப் பேச்சாளரான மஹாவிஷ்ணு போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.
திரை பிரபலங்களுக்கு வரும் விமர்சனங்களை போல் தன்மீது போர்தொடுத்த சர்ச்சைகளை பற்றி சிறிதளவும் கண்டுகொள்ளாமல் எந்த வித சோர்வும் இன்றி தனது பணிகளை மேற்கொண்டு பலருக்கும் மஹாவிஷ்ணு உதவிகளை செய்து வருகிறார்.
பரம்பொருள் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி பலருக்கு பல உதவிகள் செய்து வந்ததோடு,ஆன்மீக சொற்பொழிவுகளும் நிகழ்த்தி வரும் மஹாவிஷ்ணுக்கு சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பரம்பொருள் அறக்கட்டளையின் கிளைகள் உள்ளது .
Also Read : மருத்துவ மாணவர் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைப்பு..!!
இதன்மூலம் வெளிநாடுகளிலும் தனது தியானப் பயிற்சி வகுப்புகளை மஹாவிஷ்ணு எடுத்து வருவதுடன் பல மனிதநேயமிக்க செயல்களையும் செய்து வருகிறார் .
அந்தவகையில் கலக்கப்போவது யார் தொடரில் பங்கேற்று பிரபலமான நாகேஷ் செல்லக்கண்ணு என்பவர் தற்போது தான் வறுமையில் வாடுவதாகவும் தனக்கு ஏதாவது உதவ முடியுமா எனவும் கேட்டு மஹாவிஷ்ணுவைத் தொடர்பு கொண்டுள்ளார்.
என்ன உதவி செய்ய வேண்டும் என மஹாவிஷ்ணு கேட்டபோது , வாடகை ஆட்டோ ஓட்டும் தனக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ கிடைத்தால் வாழ்க்கை வளம் பெறும் என செல்லக்கண்ணு கூறியுள்ளார் .
இதையடுத்து புதிய ஆட்டோ ஒன்றை வாங்கிய மஹா விஷ்ணுவே நேரில் சென்று செல்லக்கண்ணுக்கு ஆட்டோவை வழங்கி பரம்பொருள் அறக்கட்டளை பக்தர்கள் சார்பாக அதில் பயணம் சென்றுள்ளார்.
மஹாவிஷ்ணுவின் இந்த செயல் தற்போது அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.