மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பரம்பொருள் அறக்கட்டளையின் நிர்வாகியான மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக சைதாப்பேட்டை போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கடந்த செப்.7-ம் தேதியன்று கைது செய்தனர்.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மகாவிஷ்ணுவுக்கு நீதிபதிகள் ஜாமின் வழங்கியுள்ளனர்.