இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமான மஹிந்திரா, ஸ்கோடா-வோல்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்துடன் வணிக ரீதியான இணைப்பு (Joint Venture), ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஸ்கோடா-வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பங்கள், அதீத உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை மஹிந்திரா தனது கார்கள் உற்பத்திக்கு பயன்படுத்திக் கொள்ளவும்,
குறைந்த செலவில், அதிக செயல் திறன் கொண்ட மஹிந்திராவின் IC Engine-கள், ஸ்கோடா கார்களில் பயன்படித்திக் கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மஹிந்திரா சுமார் ₹5000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா தனது 50% உரிமப் பங்குகளை மஹிந்திராவுக்கு வழங்க திட்டம். இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் $1 பில்லியன் என கூறப்படுகிறது.
இந்த வணிக ரீதியான இணைப்பு, ஸ்கோடா-வோக்ஸ்வேகன் போன்ற ஐரோப்பிய கார்களின் விலையை குறைக்கவும், மஹிந்திரா கார்களின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்கவும் பயன்படும் என அட்டோமொபைல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.