நீட் தேர்வு மோசடி தொடர்பாக குஜராத் மாநிலம் கோத்ராவைச் சேர்ந்த ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு ( Malpractice ) செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த 6 ஆம் தேதி 557 நகரங்களில் நடைபெற்றது .
மருத்துவம் பயின்று மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற கனவுடன் இந்த தேர்வை எழுத சுமார் 24 லட்சம் பேர் தேர்வு பதிவு செய்திருந்தனர் .
இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பல்வேறு தரப்புகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது இன்று அம்பலமாகி உள்ளது .
Also Read : நாமக்கல்லில் இருந்து திருச்செந்தூரருக்கு ரயில் சேவை..!!
நீட் தேர்வுக்கு முந்தைய நாள் பாட்னாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கவைக்கப்பட்ட 20 தேர்வர்களுக்கு விடையுடன் கூடிய வினாத்தாள் அளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது .
பீகாரைச் சேர்ந்த யாதவேந்து என்பவர் முறைகேட்டை ஒப்புக்கொண்டுள்ளார். இவருக்கு யாருடன் தொடர்பு இருக்கிறது? என விசாரணை நடைபெற்று வருகிறது .
மேலும் இந்த முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்ட குஜராத் மாநிலம் கோத்ராவைச் சேர்ந்த ஆசிரியர் ( Malpractice ) உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.