கர்நாடகாவில் விவசாயம் செய்வதற்காக 3 மாதம் பரோல் கேட்டு கைது மனு அளித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் தந்தையின் நிலத்தில் விவசாயம் செய்வதற்காக ஆயுள் தண்டனை கைதி சந்திராவுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சந்திரா கடந்த 10 ஆண்டுகளாக பரோலில் வெளியே செல்லாமல் இருந்துள்ளார் . இந்நிலையில் திடீரென தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என சந்திரா ஆசைப்பட்டுள்ளார்.
Also Read : ஃபெஞ்சல் புயல் எதிரொலி – பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு..!!
இதையடுத்து தனது தந்தை நிலத்தில் விவசாயம் செய்ய 3 மாதம் பரோல் தருமாறு சந்திரா நீதிமன்றத்தில் மனு அழுதுள்ளார் .
சந்திராவின் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிறையில் சந்திராவின் நடவடிக்கை குறித்து விசாரித்துள்ளனர் . இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் 10 ஆண்டுகளாக பரோலில் வெளியே செல்லாமல் இருந்ததாகவும் அவர் சிறையில் நல்லபடியாக நடந்துகொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போலீசாரின் தகவலை ஆராய்ந்தும் சந்திராவின் நியாயமான கோரிக்கையை கருத்தில் கொண்டும் , விவசாய வேலையை மட்டுமே செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்து நீதிபதி பரோல் வழங்கியுள்ளார்.