மலேசியாவில் தனது கடினமான காலத்தில் உடன் இருந்த மனைவியை விட்டு, 2வது திருமணம் செய்த நபரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
மலேசியாவில் கோர விபத்தில் சிக்கி 6 வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்த கணவரை அவரது மனைவி கண்ணும் கருத்துமாக பார்த்து பராமரித்து வந்துள்ளார் . இந்நிலையில் காயத்தில் இருந்து விடுபட்டு குணமான சில நாட்களிலேயே முதல் மனைவியை விட்டு வேறொரு பெண்ணை அந்த கணவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் .
Also Read : வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!
என்னதான் தனது கணவன் தனக்கு துரோகம் செய்தாலும் அதனை ஓரத்தில் வைத்து தனது கணவரின் 2வது திருமணத்திற்கு முன்னாள் மனைவி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார் . இந்த பதிவை கண்ட நெட்டிசன்கள் ‘நன்றி கெட்ட கணவர்’ என கடுமையாக அவரை விமர்சித்து வருகின்றனர்.