எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் பகுதி மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் மீனவர்களை சுற்றிவளைத்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் மீனவர்கள் 10 பேரை கைது செய்து அழைத்துச் சென்றது.
Also Read : இஸ்ரோ ஏவிய செயற்கைக்கோளில் கோளாறு..!!
இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் தற்போது மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகமாகிகொன்டெ வரும் நிலையில் மீனவர்களும் அவர்களின் குடும்பங்களும் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .