Manjummel Boys : இளைஞர்கள் கொண்டாடும் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக உருவெடுத்துள்ள ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்திற்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பொதுவாக கேரள சினிமவில் மினிமம் பட்ஜெட் படங்களே அதிகம் வெற்றி பெற்று வரும் நிலையில் தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற மினிமம் பட்ஜெட் கேரளா மட்டுமின்றி பல மொழிகளில் வெளியாகி பட்டயகிளப்பி வருகிறது .
சிதம்பரம் இயக்கியுள்ள இப்படம் மிகவும் எளிமையாக எந்த வித ஆபாச காட்சிகள் ஆக்சன் காட்சிகள் இல்லாமல் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.
Also Read : https://itamiltv.com/four-types-of-certificates-in-schools-tn-minister-announcement/
இளைஞர்கள் தங்களது நண்பர்களோடு கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வந்து பார்த்து வருவதால் இப்படம் வ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ளது.
ரசிகர்கள் மட்டுமின்றி இப்படத்தை திரை நட்சத்திரங்களும் கொண்டாடி வருவது மட்டுமல்லாமல் படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
திரையரங்குளில் சக்கைபோடு (Manjummel Boys) போட்டு வரும் வரும் இப்படம் 100 கோடி மயில்கல்லை எட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.