காமெடி என்ற பெயரில் நடிகர் மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியதற்கு உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த லியோ திரைப்படத்தில் எனக்கும் த்ரிஷாவுக்கும் பாலியல் தொந்தரவு செய்யும் காட்சியே இல்லை என நடிகர் மன்சூர் அலிகான் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில் நடிகை த்ரிஷா உள்பட திரை பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதற்கிடையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் இச்சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்ததுடன் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார் .
இந்நிலையில் காமெடி என்ற பெயரில் நடிகர் மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியதற்கு உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
அடுத்தவர்கள் மனது புண்படுகிறது என்றால், அதற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? இந்த விவகாரத்தில் ஈகோவை விட்டுவிட்டு நடிகர் மன்சூர் அலிகான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும், அதுவே சரியான நடவடிக்கையாக இருக்கும் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.