சென்னை – பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் தேசிய தலைவர் மாயாவதி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் வழக்கறிஞரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவருமான ஆம்ஸ்ட்ராங் . இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் தனது வீட்டின் வெளியே அண்ணன் வீரமணி (65), பாலாஜி (53) ஆகியோருடன் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம
நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .
சென்னையில் உலுக்கிய இந்த படுகொலை சம்பத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தற்போது உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவருமான மாயாவதி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.