கர்நாடக மாநிலம், ஹாவேரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில், புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி பஸ் ஒன்று வேகமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது .
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த கொடூர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Also Read : ஜியோவை தொடர்ந்து கட்டண உயர்வை அறிவித்தது ஏர்டெல்..!!
முதற்கட்ட தகவலின்படி, இறந்தவர்கள் ஷிமோகா மாவட்டம் பத்ராவதி தாலுக்காவில் உள்ள எம்மிஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும். பெலகாவி மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிதசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிந்து விசராணை நடத்தி வருகின்றனர்.