ஜல்லகத்துக்கு பெயர் போன மதுரை அலங்காநல்லூரில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை (Jallikattu Stadium) ஜனவரி 23ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள் பண்டிகை 4 நாட்கள் வரை கொண்டாடப்படும் இப்பண்டிகையை முக்கியமாக விவசாயிகள் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
கிராமங்களில் இப்பண்டிகை பல்வேறு விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கொலைக்களமாக கொண்டாடப்படுவதை பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
அந்தவகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் . அதேபோல் இந்த வருடமும் இப்போட்டி கோலாகலமாக நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெறும் இப்போட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் உலகளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டைக் காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வந்து மகிழ்ச்சியுடன் கண்டு கழிப்பார்கள் .
அதிலும் குறிப்பாக மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் பார்வையாளர்கள், காளைகள், மாடுபிடி வீரர்களுக்குப் போதுமான இடவசதி இல்லாமல் இருப்பது சற்று கஷ்டமாக இருந்தது வந்தது.
உலகளவில் பிரபலமாக இருந்தாலும் இப்போட்டியை பார்வையாளர்கள் மரங்களில் ஏறியும், வீடுகளின் மாடிகளில் நின்றும் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சுமார் 10 ஆயிரம் பேர் பார்க்கும் அளவில் பிரமாண்ட நிரந்தர பார்வையாளர்கள் மைதானம் (Jallikattu Stadium) அமைக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி கூறியதாவது :
மின்னல் வேகத்தில் கட்டப்பட்டு வரும் இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை இம்மாத இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
Also Read : https://itamiltv.com/ennore-coromandel-factory-issue-is-highly-condemnable/
44 கோடி செலவில் 67 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தை, வரும் ஜனவரி 23 அல்லது 24ல் முதல்வர் ஸ்டாலின் நேரில் திறந்து வைப்பார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு அலங்காநல்லூரில் நடைபெறும் இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயம் நாடு முழுவதும் பேசப்படும் அளவிக்ரு இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.