விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்த ரூ. 3 இலட்சத்திற்கான காசோலையை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமசந்திரன் வழங்கினார் .
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், தாயில்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் கடந்த (25.7.2023) தேதி அன்று பிற்பகல் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி, மற்றும் மண்குண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பானு, ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இரங்கல் தெரிவித்ததோடு அவரது குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார் .
இந்நிலையில் உயிரிழந்த முருகேஸ்வரி மற்றும் பானுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்த ரூ. 3 இலட்சத்திற்கான காசோலையை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமசந்திரன் வழங்கினார் .