மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் சுமார் 18 மணி நேரம் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் மருத்துவமனையில் வைத்தே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார் . அவர் சுயநினைவுக்கு திரும்பிய பின் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
இந்நிலையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு உள்ளிட்டோர் அமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனை சென்றுள்ளனர் .
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அமைச்சர் சேகர் பாபு கூறுகையில் :
அமைச்சர் செந்தில் பாலாஜி ICU ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்; சுய நினைவில்லாமல் உள்ளார்; நான்கு ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தபோதும் அவர் கண் திறந்து பார்க்கவில்லை; அவர் காது அருகே வீக்கம் உள்ளது.
நிச்சயமாக துன்புறுத்தப்பட்டிருப்பார்; தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது; இந்த சலசலப்புக்கெல்லாம் எல்லாம் திமுக அஞ்சாது; இது போன்ற பல சோதனைகளை திமுக பார்த்துள்ளது; எங்களுக்கு பயம் கிடையாது அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் .
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்