சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் கூட அமர வைத்து (Assembly Issue) நடைபெற்ற சட்டமன்றம் இன்று எவ்வித பாரபட்சம் இன்றி நடுநிலையோடு நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் அரசு அச்சக பணியாளர்களுக்கு ரூ. 34.50.கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் 96 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது
நவீன வசதிகள் உடன் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் சாமிநாதன் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் ப்ரியா, ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது :
தமிழ்நாடு அரசின் அச்சகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தண்டையார்பேட்டை பகுதியில் ஏற்கனவே இருந்த குடியிருப்புகள் தகுதியற்ற நிலையில் இருந்த காரணத்தினால்
ஏறத்தாழ 70 ஆண்டு காலத்துக்கு முன்பு கட்டுப்பட்ட கட்டிடங்கள் பழுதடைந்ததால்
புதியதாக வாகன நிறுத்தம் இடத்தோடு பத்து மாடி கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக வாகனம் நிறுத்தம் மீதி மறுத்தளங்கள் கொண்ட 96 குடியிருப்புகள் ஏறத்தாழ 34 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன
திட்டமிடப்பட்ட அளவில் முன்னேற்ற பாதையில் பணிகள் சென்று கொண்டிருக்கிறது இன்னும் வேகமாக பணிகளை செய்வதற்கு
பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்
வருகின்ற காலத்தில் கூடுதலாக நான்கு தளங்கள் கட்டப்பட்டு ஏறத்தாழ 160 வீடுகள் குடியிருக்க கூடிய வகையில் அமைய உள்ளதாகவும்
தற்போது 96 குடியிருப்புகள் ஆறு தளங்கள் பணிகள் நடைபெற்று வருகிறது
சட்டமன்றம் நடுநிலை இல்லாமல் நடந்து கொண்டு வருவதாக தெரிவித்த அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கூறியதாவது :
கடந்த காலத்தில் சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் சட்டமன்றம் நடக்கின்ற பொழுது அமர செய்திருந்தார்கள் இன்று பாரபட்சமற்ற நிலையில் நடுநிலையோடு சபாநாயகர் நடத்திக் கொண்டிருக்கிறார்
எனவே அவர்களுக்கு கடந்த காலத்து சம்பவங்கள் மறந்திருக்க வாய்ப்பிருக்கிறது . அதை நினைத்துப் பார்த்தால் இப்பொழுது சட்டமன்ற எப்படி நடை பெறுகிறது என்று தெரியும்
Also Read :https://itamiltv.com/one-country-one-election-is-impossible/
குறிப்பாக முதலமைச்சர் அவர்கள் நடுநிலையோடு சட்டமன்றத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் நேற்று கூட அதிமுக வைத்த கோரிக்கை பரிசீலனைளிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு தெரிவித்துள்ளார்
அந்த அளவிற்கு நடுநிலையோடு (Assembly Issue) சட்டமன்றம் நடைபெற்று வருவதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்