கமல்ஹாசன் அவர்களால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி 7ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள (MNM Kamal) நிலையில் இன்று கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7 ஆம் ஆண்டு தொடக்க விழா குறித்து வெளியிடப்பட்ட செய்தியில் கூறிருப்பதாவது :
தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
மக்கள் நலன் ஒன்றே தனது கொள்கை, அதுவே நாளைய உலகின் நவீன சித்தாந்தம்’ என்று முழங்கி நம்மவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நாள் பிப்ரவரி 21.
அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி இன்று காலை 10 மணியளவில்
கட்சியின் தலைமை நிலையத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களிடையே கமல்ஹாசன் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.
அந்த சீர்மிகு நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள்,
உறுப்பினர்கள்; நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தாய்மொழி தினத்தில் (பிப்ரவரி 21) பிறந்த மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்லும். வரலாறு அதைச் சொல்லும. வாருங்கள்! ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிரத்னம் இயக்கம் தக் லைப் படத்தின் வேலைக்காக அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசன் சென்னை விமான நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
Also Read : https://itamiltv.com/drug-trafficking-358-people-arrested/
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7 ஆம் ஆண்டு (MNM Kamal) தொடக்க விழா இன்று சிறப்பாக கொண்டாடபட உள்ளது.
இந்த நன்னாளில் கூட்டணி குறித்த நல்ல செய்தியில் எதிர்பார்க்கலாம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருந்த நிலையில்
இன்று கூட்டணி குறித்த அறிவிப்பை எதிர்நோக்கி அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.