தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் பருவமழை வெளுத்துவாங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
Also Read : டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை – மாசுக் கட்டுப்பாட்டு குழு அதிரடி உத்தரவு..!!
சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு உட்பட்ட ஆவின் மண்டல அலுவலகங்களில் 9,000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடை இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் 50, 000 அரை லிட்டர் பால் பாக்கெட்டுகள் , ஆவடி, அண்ணாசாலை, தியாகராய நகர், பூவிருந்தவல்லி, வேளச்சேரி, மாதாவரம், விருகம்பாக்கம், நங்கநல்லூர் ஆகிய பாகங்களில் தலா 1000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையை எதிர்கொள்ள அணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.