மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில், நோய்வாய்ப்பட்ட சிறுத்தையை கிராம மக்கள் சிலர் சுற்றி வளைத்து, அதனுடன் புகைப்படம் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் சிறுத்தை மெல்ல நடந்து செல்கிறது. அதனை ஒருவர் கைகளால் தள்ளி நகர்த்தி செல்கிறார். மேலும் பலர் குச்சிகளோடு அதனை பின் தொடர்கிறார்கள். பலர் அந்த சிறுத்தையை வீடியோ பதிவும் செய்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேவாஸில் உள்ள வனத்துறையின் கியோனி சரணாலயத்தின் அதிகாரிகள், அதனை மீட்டு இந்தூரின் கமலா நேரு உயிரியல் பூங்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சுமார் 10 வயதுடைய ஆண் சிறுத்தை, சில மூளைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக பூங்காவின் பொறுப்பாளர் டாக்டர் உத்தம் யாதவ் கூறினார். கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின்படி, சிறுத்தைப்புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக எதிர்காலத்தில் நோய்வாய்ப்பட்ட வனவிலங்குகள் அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.