இந்தியாவில் தரம் குறைந்த உணவு பொருட்களை பன்னாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Nestle, PepsiCo, மற்றும் Unilever உள்ளிட்ட உணவு நிறுவனங்கள் இந்தியா போன்ற குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வதாக ATNI அமைப்பு நடத்திய புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
Also Read : வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!!
5-க்கு 3.5 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானதாகக் கருதப்படும் வேளையில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வெறும் 1.8-ஆகவே உள்ளதாக ATNI அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் ஏற்கனவே Nestle உள்ளிட்ட பல உணவு நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டு மீண்டும் தடை நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.