மத்தியப்பிரதேசம் மாநிலம், குவாலியரில் 1500க்கும் மேற்பட்டோர் இணைந்து தபேலா வாசித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் நேற்று ‘தால் தர்பார்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1500க்கும் மேற்பட்டோர் தபேலா வசித்தனர். ஒரே நேரத்தில் அதிக மக்கள் தபேலா வாசித்ததன் அடிப்படையில் அவர்கள் கின்னஸ் சாதனை படைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சட்டமன்ற சபாநாயகர் நரேந்திர சிங் தோமர் , மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கின்னஸ் சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழைக் கொடுத்துக் கௌரவித்த மத்திய பிரதேசத்தின் முதல்வர் மோகன் யாதவ், டிசம்பர் 25ஆம் தேதி ‘தபேலா திவாஸ்’ ஆகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
மேலும் இந்தியாவில் இசையின் வரலாறு 5000 ஆண்டுகளுக்கும் மேலானது என்றும், இசையையும் குவாலியரையும் பிரிக்க முடியாது” என்றும் கூறினார்.