அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் குடியரசுக் கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது நன்றி என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நேற்று அதிபர் தேர்தல் தொடங்கி நடைபெற்ற நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கையும் நடந்தது இதையடுத்து வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த டிரம்ப் கமலஹாரிஸை வீழ்த்தி அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக ட்ரம்ப் தேர்வுசெய்யப்பட்டார் .
இதையடுத்து வெற்றி உரையாற்றிய டிரம்ப் கூறியதாவது :
குடியரசுக் கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது நன்றி. இதுவரை யாரும் காணாத வகையில் ஒரு இயக்கத்தை நடத்தி வெற்றி வாகை சூடியுள்ளோம்; அமெரிக்காவை மேலும் மகத்தான நாடாக மாற்றுவேன்.
Also Read : கோவாவில் குறையும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை – வெளியான அதிர்ச்சி தகவல்..!!
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும்; மக்கள் என்னை நம்பி வாக்களித்துள்ளனர், அவர்களின் நம்பிக்கை வீண் போகாது .
அமெரிக்காவிற்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சட்டப்பூர்வமாக வரவேண்டும்; அமெரிக்காவில் சட்டவிரோதமாக மக்கள் குடியேறுவது தடுத்து நிறுத்தப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.