நாகை – இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த ஆண்டு முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு முதல் பயணமும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது .
அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் இலங்கைக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கப்பலில் பயணம் செய்ய பல்வேறு தேதிகளில் பலரும் முன்பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கப்பலுக்கு போதுமான பயணிகள் இல்லை எனக்கூறி இந்த கப்பல் போக்குவரத்து சேவையை தற்காலிகமாக நிறுவதுவதாக அறிவிக்கப்பட்டது .
Also Read : கோவை விமான நிலையத்தில் 1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்..!!
இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த ஆகஸ்ட் 16 முதல் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கியது
இந்த கப்பலில் சாதாரண வகுப்பு கட்டணமாக ஒருவருக்கு ₹5,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; பிரீமியம் வகுப்பில் ஒரு நபருக்கு கட்டணமாக 7,500 நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாகை – இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவைக்கு போதிய பயணிகள் வருகை இல்லாததால் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
செப்டம்பர் 15ம் தேதி வரையில், வாரத்திற்கு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.