நயன்தாராவின் திரைப்பயணம் மற்றும் காதல் திருமணத்தை உள்ளடக்கிய NAYANTHARA – BEYOND THE FAIRY TALE ஆவணப்படம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று Netflix OTT தளத்தில் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவுக்கும் பிரபல திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இவரது திருமண புகைப்படங்கள் மட்டும் உலகளவில் வைரலான நிலையில் இவர்களது திருமண வீடியோ எதுவும் சிறிதளவு கூட வெளிவரவில்லை ஏனென்றால் இவர்களது திருமண வீடியோவை Netflix நிறுவனம் பலகோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
நடிகை நயன்தாராவின் திரைப்பயணம் மற்றும் காதல் திருமணத்தை உள்ளடக்கிய NAYANTHARA – BEYOND THE FAIRY TALE என்ற தலைப்பில் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது எப்போது வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இப்படம் நயன்தாராவின் 40 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது.
Also Read : தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இனி வாய்ப்பே இல்லை – ராமதாஸ்
இதில் தனுஷ் தரப்பில் இருந்து காப்புரிமை கேட்கப்பட்ட காட்சிகள், ஆவணப்படத்தில் இருந்து இதுவரை நீக்கப்படவில்லை
ஆவண படத்தின் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது
நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளும் இசையும் எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை
நானும் ரவுடி தான் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் மட்டும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
மூன்று நிமிட காட்சிகளை பயன்படுத்த 10 கோடி ரூபாய் கேட்பதாக தனுஷ் மீது நடிகை நயன்தாரா புகார் தெரிவித்து இருந்தார். நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளராக தனுஷ் இருந்தார்.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை நயன்தாராவின் திருமண படத்தில் பயன்படுத்த 10 கோடி ரூபாய் கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.