தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்க போவதாக வானிலை ஆய்வு மையம் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.
அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்
தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது.