நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது பீகாரில் செயல்படுத்தப்போகும் திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பீகாரில் உட்கட்டமைப்பை மேம்படுத்த, வங்கிகள் வழியாக நிதி வழங்கப்படும்
பீகாரில் புதிய மருத்துவக் கல்லூரிகள், விளையாட்டு உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
பீகார் மாநிலம் கயாவில் புதிய தொழில் வழித்தடம் அமைக்கப்படும்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய இலவச வீடுகள் கட்டப்படும்
நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும்.
ஆந்திராவில் பிரிக்கும் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
Also Read : இன்னும் எத்தனை நாள் வேடிக்கை பார்க்க போறீங்க – அன்புமணி ஆவேசக் கேள்வி..!!
உயர்கல்விக் கடனுக்கான உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு.
கிசான் கிரெடிட் கார்டு 5 மாநிலங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.
காய்கறி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கப்படும்.
உள்நாட்டு கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளது.
முதல் முறை பணிக்குச் செல்பவர்களுக்கு, அரசு ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தபடும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.