SETC : திருவள்ளூரில் இருந்து திருநெல்வேலிக்கு புதிய பேருந்து சேவையை (180RU) அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த திருவள்ளூர் – திருநெல்வேலி பேருந்து சேவை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்பேருந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வந்தவாசி, திண்டிவனம், திருச்சி, மதுரை மார்க்கமாக திருநெல்வேலி சென்றடையும்
திருவள்ளூரில் இருந்து தினசரி மாலை 5.45 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து மாலை 4.15 மணிக்கும் புறப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம் .
மேலும் http://tnstc.in இணையதளம் அல்லது TNSTC செயலி வாயிலாக பயணிகள் முன்பதிவு செய்து இப்பேருந்து வசதியினை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக பயணம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பேருந்து சேவைக்கு ருபாய் 645 கட்டணமாக (SETC) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.