சென்னையில் விரைவில் நடைபெற இருக்கும் ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 பந்தயத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் வரும் டிச. 9,10 ம் தேதிகளில் , தெற்காசியாவின் முதல் ஃபார்முலா 4 சர்வதேச இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் இரவு நேர கார் பந்தையன்களாக நடைபெற உள்ளது.
இந்த பந்தையத்திற்கான டிக்கெட்டுகள், விற்பனை மற்றும் முன்பதிவு செய்வதறகான வழிமுறைகளையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தது .
இந்நிலையில் பார்முலா 4 பந்தயத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த பாலுசாமி என்பவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
பார்முலா கார் பந்தயம் நடத்துவதற்கு பொதுமக்களிடம் ஒப்புதல் கேட்கவில்லை; தீவுத்திடலை சுற்றி கார்பந்தயம் நடத்துவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அதேசமயம் இருங்காட்டுக்கோட்டை வளாகத்தில் இந்த கார் பந்தயத்தை நடத்தினால் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதை தடுக்கலாம் என்றும் பாலுசாமி தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.