ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 3 நாட்களாக சட்டப்பேரவையில் நண்டை பெற்றது. நேற்றைய கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் நேற்று பதிலுரை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக. ஆட்சியில் கடன் அளவு அதிகமாகி விட்டது. வருவாய் குறைந்து விட்டது என்று தெரிவித்தார்.
தமிழ் நாட்டின் பொருளாதார ஆலோசனைக்கான சிறப்பு நிபுணர்கள் குழுவினர் சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்றும் நிதித்துறையில் ஒற்றை சாளர முறையில் பயனாளிகளுக்கு சலுகைகள் சென்றடைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதற்காக புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டு திட்டம் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்றும் இதன்மூலம் கல்லூரி கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு, தமிழகம் முழுவதும் கல்லூரிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்த அவர் இதற்கு காமராஜர் பெயரை சூட்ட முதலமைச்சர் கேட்டுக்கொண்டார் என்றும் ரூ.40 கோடியில் 6 மாடிகளுடன் நவீன மாணவர் விடுதி சென்னையில் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கோவை மெட்ரோ ரெயிலுக்கு விரிவான திட்ட அறிக்கை முடிவாகி விட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நிதி பெறுவதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.