உணவுபொருட்கள் நுகர்வோர் மற்றும் வழங்கல் துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பயோமெட்ரிக் முறை செயல்படவில்லை என்றாலும் நுகர்வோருக்கு பொருட்கள் வழங்குவதில் எந்த தாமதமும் தடையும் இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நுகர்வோருக்கான உணவுப் பொருட்கள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. பயோ மெட்ரிக் முறையில் குடும்ப உறுப்பினர்களின் ரேகைகள் பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்க உணவுபொருட்கள் நுகர்வோர் மற்றும் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
பயோமெட்ரிக் முறையில் வயதானவர்களின் கைரேகைகள் சரியாக பதிவதில்லை என பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்ததால் சமீபகாலமாக பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கைரேகை பதிவை புதுப்பிக்க ரேசன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து உணவுபொருட்கள் நுகர்வோர் மற்றும் வழங்கல் துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பயோமெட்ரிக் முறை செயல்படவில்லை என்றாலும் நுகர்வோருக்கு பொருட்கள் வழங்குவதில் எந்த தாமதமும் தடையும் இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளது.