முதல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 51ஆம் ஆண்டு தினத்தினை சுட்டிக்காட்டி, அடக்குமுறைகளுக்கு அஞ்சாத இயக்கம் அஇஅதிமுக என ஜெயக்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஜெயக்குமார் பதிவிட்டிருப்பதாவது;-
தன்னை முடிக்க நினைத்தவர்களுக்கு முதல் இடைத்தேர்தலில் இடியை போன்ற ஏமாற்றத்தை பரிசளித்த புரட்சித்தலைவர்! 51-ஆம் ஆண்டு வெற்றி தினம்!
ஆம்!திண்டுக்கல் இடைத்தேர்தலில் புரட்சித்தலைவர் சார்பாக நிறுத்தப்பட்டார் மாயத்தேவர்.
அங்கு தலைவர் மக்களை சந்திக்க..சந்திக்க..எதிர் நின்றவர்கள் எப்படியெல்லாம் தலைவருக்கு நெருக்கடிகள் கொடுப்பது என சிந்திக்க தொடங்கினர்.
இறுதியில் புரட்சித்தலைவரின் நல்லாதரவோடு திரு.மாயத்தேவர் அவர்களின் வெற்றி வரலாற்றில் வருமளவிற்கு இந்திய நாடே இமை உயர்த்தும் அளவிற்கும் அமைந்தது!
ஒவ்வொரு கழக தொண்டனுக்கும் அது பொன்னாளாய் போனது!
அன்று முதல் இன்று வரை சோதனைகள் பல வந்தாலும் இந்த இயக்கத்தை எங்கோ இருக்கும் தொண்டன் இழுத்துக் கொண்டு தான் செல்கிறான்!
பிளவுக்கும் அழிவுக்கும் கழகம் செல்லும் என நினைக்கும் சிலருக்கு எப்படி புரிய வைப்பது? அஇஅதிமுக அடக்குமுறைகளுக்கு அஞ்சாத இயக்கம் என்று!
இடியை போன்ற ஏமாற்றத்தை பரிசளித்த புரட்சித்தலைவர்!