பா.ஜ.க நிர்வாகியான தனது தந்தையுடன் வாக்குச்சாவடியில், மின்னணு எந்திரத்தில் சிறுவன் ஒருவன் வாக்களிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பெராசியாவில் மக்களவைத் தேர்தலின்போது சிறுவன் ஒருவன் வாக்களிப்பதாகக் காட்டும் வீடியோ இன்று (மே 9) இணையத்தில் வெளியாகி உள்ளது.
அந்த சிறுவன், பாரதிய ஜனதா கட்சியின்பஞ்சாயத்து தலைவரான வினய் மொஹர் என்பவரி மகன் ஆவார். செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலின் போது வினய் மொஹருடன் வாக்குச் சாவடிக்குள் சென்ற அவரது தந்தைக்குப் பதில் அவரே தாமரை சின்னத்துக்கு , பட்டனை அழுத்தி வாக்களித்துள்ளார்.
மகன் வாக்களிப்பதை, தந்தை வினய் மொஹர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிந்துள்ளார். அந்த 14 விநாடி வீடியோ இன்று பரபரப்பப் பற்ற வைத்துள்ளது.
இந்த வீடியோவை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தும் கேள்வி எழுப்பி உள்ளார்.
வாக்குச்சாவடிக்குள் செல்போன் எப்படி அனுமதிக்கப்பட்டது.
தந்தையுடன் மகன் வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதி அளித்தது யார் என்று கேள்விகள் எழுந்துள்ளன.
பா.ஜ.க நிர்வாகி, தேர்தல் ஆணையத்தை தனது மகனின் விளையாட்டுப் பொருளாக்கி விட்டாரா என்றும் விமர்சனம் வெளியாகி உள்ளது.
தேர்தல் ஆணையம் தரப்பில் இதற்கு எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை.
இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியடைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி அதிகாரி மற்றும் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கவுசலேந்திர விக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.