உச்சநீதிமன்ற பார் அசோஷியேஷன் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வெற்றி பெற்றிருப்பது, நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான முன்னோட்டமா என்று யூகங்கள் கிளம்பியுள்ளன.
உச்சநீதிமன்ற பார் அசோஷியேஷன் தலைவர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரான கபில்சிபல் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து தற்போது தலைவராக இருக்கும் ஆதிஷ் அகர்வலா மற்றும் பிரியா ஹிங்கோரனி, மற்றொரு சீனியர் வழக்கறிஞரான பிரதீப் ராய் உள்ளிட்டோரும் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவுகளின் படி 1066 வாக்குகள் பெற்று கபில்சிபல் வெற்றி பெற்று உச்சநீதிமன்ற பார் அசோஷியேஷன் தலைவராகி இருக்கிறார்.
கபில் சிபல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது இது 4-வது முறையாகும்.
ஹார்வார்டு சட்ட பள்ளியில் பட்டம் பெற்ற கபில் சிபல் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக 1989-90 களில் பதவி வகித்துள்ளார். இதே போல கடந்த 2001 ஆம் ஆண்டு வழக்கறிஞர் சங்க தலைவர் பொறுப்பையும் கபில்சிபல் வகித்துள்ளார்.
கபில்சிபல் தற்போது வெற்றி பெற்றது குறித்து காங்கிரஸ் கட்சி தரப்பில் மகிழ்ச்சி ததும்பிக் கொண்டிருக்கிறது.
சமீபகாலமாக உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள், மத்திய அரசின் ஒரு சில நடவடிக்கைகளை கேள்வி கேட்கும் விதத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையிl காங்கிரஸ் தலைவரான கபில் சிபல் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சி மாற்றத்துக்கான முன்னோட்டமாக இது இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே கபில்சிபல் வெற்றிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.
அவரது வெற்றி நீதிமன்ற சுதந்திரமும் நமது அரசியலமைப்பு விழுமியங்களும் பாதுகாப்பான கைகளில் இருப்பதை உறுதி செய்கிறது.
இந்திய மக்கள் ஆழமாகப் போற்றும் நீதி மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்த அவரது தலைமையின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Congratulations to Senior Advocate @KapilSibal