கேரள மாநிலத்தில் பேருந்து ஒன்றில் ஆடையில் ரகசிய அறைகள் அமைத்து இளைஞர் ஒருவர் கடத்திய 14லட்சத்து 20ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கேரளாவில் மக்களைத் தேர்தல் நடைபெற இருப்பதால் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் கேரளா – தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து கேரளா வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்குப் பின்னரே கேரளா தமிழக எல்லை பகுதிகளில் அனுமதிக்கப் படுகிறது.
அதன்படி, கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் தமிழக, கேரள எல்லையான வளையார் சோதனைச்சாவடியில் வைத்து கேரள போலீஸார் சோதனை நடத்தினர்.
பேருந்தில் இருந்த அனைவரிடமும் சோதனை நடத்தப்பட்டது. பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் பைகள், உடைகள் என அனைத்தையும் போலீஸார் சோதனையிட்டனர்.
இந்நிலையில் அந்தப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய முறையில் நடந்து கொண்ட இளைஞர் வினோ என்பவரை போலீஸார் தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
அவர் கொண்டு சென்ற பைகளைச் சோதனையிட்டபோது, ஒன்றும் சிக்கவில்லை.
ஆனால் ஆடைகளை பரிசோதித்தபோது அவரது மேலாடை ற்றும் உள்ளாடைக்குள் ரகசிய அறைகள் வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த ரகசிய அறைகள் பிரத்யேகமாக அவர் பணத்தை மறைத்து எடுத்து வருவற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்யப்பட்தார்.
மேலும் இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் எர்ணாகுளம் அருகே ஜெராகி பகுதியைச் சேர்ந்தவர என்பதும், பணத்திற்கான உரிய ஆவணங்கள் இவரிடம் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
போதுமான ஆவணங்கள் இல்லாததால் வினோ மீது கருப்பு பணம் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர் வைத்திருந்த 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்தக் கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்ப்பிருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.