செப்டம்பர் மாதத்தில் சவுக்கு அமைப்பு தொடங்க இருப்பதாக சவுக்கு சங்கர் தனது இணையப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காவல்துறையில் பணியாற்றி பின்னர், சில குற்றச்சாட்டுகளின் காரணமாக அதில் இருந்து வெளியேறி தனக்கென புதிய பாதை வகுத்துக் கொண்டு செயல்பட்டு வருபவர் சவுக்கு சங்கர்.
காவல்துறையில் நடைபெறும் ஊழல்கள் மறைமுகப் பேரங்கள் குறித்து சவுக்கு என்னும் இணையப் பக்கம் தொடங்கி தொடர்ந்து அவர் பதிவிட்ட தகவல்கள் காவல்துறையின் மறுபக்கத்தை அம்பலப்படுத்தின.
தொடர்ந்து அரசியல் கட்சியினரின் செயல்பாடுகள், அங்கு நடைபெறும் தில்லுமுல்லுகள் குறித்தும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தார். இதனால் காவல்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் இவர் மீது பல்வேறு வழக்குகளை தொடுத்தபோதும் அவற்றை சந்தித்து வருகிறார்.
இதையும் படிங்க: இந்திய மசாலா பொருட்களுக்கு சர்வதேச அளவில் தடை!
அநீதிக்கு எதிராக சவுக்கு எடுத்து வீசிவரும், சவுக்கு சங்கருடன் பல்வேறு ஊடகவியலாளர்களும் தொடர்பில் இருந்து வருவதோடு, தங்களது பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் இணைய சேனல்களிலும் அவரது பேட்டியினை ஒளிபரப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தனக்கென சவுக்கு யூடியூப் சேனலைத் தொடங்கி நடத்தி வருகிறார் சவுக்கு சங்கர். லட்சக்கணக்கானோர் இவரை சமூக ஊடகங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இணையத்தில் எந்த அளவுக்கு ஆதரவு உள்ளதோ அதே அளவுக்கு சவுக்கு சங்கர் மீது எதிர்ப்பு காட்டுபவர்களும் உள்ளனர். சமீபத்தில் கூட அவரது அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை ஸ்டிங்க் ஆபரேஷன் மூலமாக வெளியிட்டு அம்பலப்படுத்தினர்.
அதே போன்று குறிப்பிட்ட அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக அவர் நடந்து கொள்வதாகவும் அவர் மீதுவிமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும் எதுகுறித்தும் கவலை கொள்ளாமல் தனக்கு கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் இன்றளவும் செயல்பட்டு வரும் சவுக்கு சங்கர், செப்டம்பர் மாதத்தில் சவுக்கு அமைப்பு தொடங்க இருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்லார்.
அமைப்புக்கான பெயர், கொடி, கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதத்தில் சவுக்கு அமைப்பு தொடங்க இருக்கிறது.