சென்னையில், தாயின் கள்ளக்காதலன் செய்த சம்பவத்தால் 8ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி கர்ப்பமாகி உள்ளார். புகாரின் பேரில் போலீசார் போக்சோவில் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கும், மினி வேனில் பூண்டு, புளி வியாபாரம் செய்து வந்த சதீஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிவிட, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
நாளடைவில் இவர்களின் தகாத உறவு பெண்ணின் கணவருக்கு தெரியவரவே, தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
கணவரை விட, கள்ளக்காதலனே முக்கியம் என்று கருதிய அந்தப் பெண், கணவரைப் பிரிந்துள்ளார்.
அதன்பின்பு சதீஷுடன் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார்.
அந்தப் பெண்ணின் 12 வயது மகள் தந்தையோடு வசித்து வந்துள்ளார்.
சிறுமி அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
தாயார் இல்லாத நிலையில், தந்தையார் அதிகமாக வீட்டு வேலைகளை செய்யச் சொன்னதாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக, தந்தையின் வீட்டில் இருந்து வெளியேறி தாயோரோடு தங்கி இருந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமியின் பள்ளியில் நடைபெற்ற மருத்துவமுகாமில் பரிசோதித்தபோது சிறுமிக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது தெரியவந்தது. இதை விட அந்த சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் தயாருக்கு தகவல் சொன்னதோடு, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கும் தகவல் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறுமியை விசாரித்தபோது, தாயின் கள்ளக்காதலனே சிறுமியையும் கர்ப்பமாக்கியது தெரியவந்தது.
தற்போது சிறுமியும் தாயும் வசிக்கும் வீட்டில் டிவி இல்லையாம். இதனால் சதீஷின் செல்போனில் சிறுமி வீடியோ பார்ப்பதுண்டாம். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட சதீஷ், சிறுமிக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டி, பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதில்தான் சிறுமி கர்ப்பமாகி உள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலனான புளி வியாபாரி சுதீஷை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாயின் தகாத நடவடிக்கை, சிறுமியையும் பாதித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.