மத்தியப் பிரதேச மாநிலத்தில் தீ விபத்தில் உயிரிழந்த 4வயது குழந்தையின் சடலத்தை இறுதிச்சடங்கு செய்வதற்காக 14 கிலோமீட்டர் தூரம் பைக்கில் எடுத்துச் சென்ற வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடிசை வீடு ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
அந்த குடிசைக்கு உள்ளே நான்கு வயதான மாற்றுத்திறனாளி குழந்தை உட்பட 3 குழந்தைகள் சிக்கிக்கொண்டனர்
இரண்டு குழந்தைகள் எப்படியோ தப்பித்து வெளியே வந்துவிட மாற்றுத்திறனாளி குழந்தை மட்டும் தீயில் கருகி உயிரிழந்துள்ளது
சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனம் வருவதற்குள், குழந்தை முழுமையாக எரிந்து போய் உள்ளது.
அக்கம் பக்கத்தினரே தண்ணீரை கொண்டு தீயை அணைத்து குழந்தையின் உடலை மீட்டிருக்கிறார்கள்.
இதன்பின்னர் அங்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்
உடற்கூறாய்வுக்குப் பின்னர் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அப்போது, உடலை கொண்டு செல்ல பெற்றோர் அமரர் ஊர்தி கேட்டுள்ளனர்.
அதற்கு, இந்த உடலை இருசக்கர வாகனத்தில் கூட கொண்டு செல்லலாம் என காவல்துறையினரும் மருத்துவமனை நிர்வாகமும் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து எரிந்த குழந்தையின் உடலை 14 கிலோ மீட்டருக்கு பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்துள்ளனர் பெற்றோர்.
சடலத்தை மூட்டைகட்டி எடுத்துச் செல்லும் வீடியோ வெளியான நிலையில் மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மனம் இளகியவர்கள் படிக்காதீர்கள்!!!