தொற்றா நோய்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணம் ஜீன்களா அல்லது வாழும் நெறிமுறைகளா என்பது குறித்து ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
தொற்றாநோய்களான புற்றுநோய், இரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய் பாதிப்புகளின் உயிரிழப்பு, நாடுகள், மக்களுக்கிடையே பெருத்த வேறுபாடுகளுடன் காணப்படுகிறது. இந்நோய்களுக்கான காரணம் ஜீன்களா? அல்லது வாழும் நெறிமுறைகளா என்பது குறித்து உலக அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வுகளில் ஜீன்களில் மாற்றங்கள் நிகழாத சூழலிலும் வாழும் நெறிமுறைகளில் ஏற்பட்ட மாற்றமே இந்த நோய்கள் ஏற்படவும், உயிரிழப்புக்கு காரணம் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக, மருத்துவ புகழேந்தி தெரிவித்துள்ளார்.
3,53,742 ஐரோப்பிய மக்களிடம், 12.9 வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் British Medical Journal-ல் வெளியிடப்பட்டுள்ளதாக புகழேந்தி கூறியுள்ளார்.
இந்த ஆய்வு முடிவுகளின் படி, ஜீன்களின் பாதிப்பு காரணமாக நோய்களின் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றாலும்,அவற்றை மாற்றுவது கடினமான காரியம். ஆனால் வாழும் நெறிமுறைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்தால், முன்கூட்டிய இறப்புகளை தடுக்க/குறைக்க முடியும் . எனவே அவற்றை மாற்றியமைத்து உயிரிழப்புகளை குறைக்கும் வழிகளை மக்களும் அரசும் பின்பற்றுவது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரமற்ற உணவு, உடலுழைப்பு குறைவு, புகை பிடித்தல், மது பழக்கம் , மன அழுத்தம், சூழல் மாசுபாடு போன்றவை வாழும் நெறிமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாகவும் ஆய்வுகள் கூறுவதாக புகழேந்தி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: காவேரி விவகாரம் : தமிழக பிரதிநிதிகளுக்கு தடை – தினகரன் கண்டனம்!