தனது வாக்கினை பதிவு செய்த கையோடு Vote4INDIA என்று குஷ்பு ட்வீட் செய்தது சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
பா.ஜ.க. நிர்வாகியும், தேசிய மகளிர் நல ஆணையர் உறுப்பிருமான நடிகை குஷ்பு தனது கணவர் மற்றும் மகள்களுடன் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.
தனது ஜனநாயகக்கடமையை நிறைவேற்றிய பின்னர் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த தேர்தல் ஆணையத்தின் ஓட்டுப்போடுங்க.. செல்பி எடுங்க… போஸ்ட் போடுங்க என்னும் செல்பி ஸ்டாண்டில், தனது கணவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவரது மகள்களும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படங்களை தனது எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டவர், நாங்கள் எங்கள் கடமையைச் செய்துள்ளோம், நீங்கள் செய்தீர்களா என்று கேள்வி எழுப்பியதோடு, #GoAndVote, #Duty, #Vote4INDIA, #VoteFor400Paar என்றும் ஹேஷ்டேக்குகளை பதிவிட்டிருந்தார்.
Vote4INDIA என்று குஷ்பு போட்ட ஹேஸ்டேக், சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாகி உள்ளது. குஷ்பு சொன்னபடி இந்தியா கூட்டணிக்கு ஓட்டு போட்டுவிட்டதாகவும், என்னதான் இருந்தாலும் அவரும் பெண் தானே… தாய் வீட்டின் மீது பாசம் இருக்கும்ல என்றும் பாஜக வை தூக்கி வீசிய அக்கா குஷ்புக்கு வாழ்த்துக்கள் என்றும் காங்கிரஸ் திமுக ஆதரவாளர்கள் அவருக்கு நன்றி தெரிவிப்பதாக பதிவிட்டு வருவது சமூக வலைதளத்தில் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: ”இந்த பூச்சாண்டி வேல எல்லாம் என்னிடம் காட்டாதீங்க..” குஷ்புவின் ஒற்றை வீடியோ!
Vote4INDIA என்னும் ஹேஷ்டேக்கை திமுகவினரும், திமுக கூட்டணிக் கட்சியினரும் தேர்தலை முன்னிட்டு பயன்படுத்தி வந்தனர். பா.ஜ.க நிர்வாகியான குஷ்பு இதே ஹேஷ்டேக்கை ஏன் கையாள வேண்டும் என்றும் பா.ஜ.க ஆதரவாளர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
குஷ்பு குறிப்பிட்டது இந்தியா தேசத்தைத்தான் என்று இன்னமும் அவர் தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
We have exercised our duty, have you?